ஹைதராபாத்: நடிகர் சரத்பாபுவின் உடல் நலம் மெல்ல தேறி வருவதாக அவரது சகோதரர் மகன் ஆயுஷ் தேஜஸ் நேற்று ஹைதராபாத்தில் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆமுதாலவலசா எனும் ஊரில் கடந்த 31.7.1951-ல் நடிகர் சரத்பாபு (71) பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யம் பாபு தீக்ஷித். இதுவரை 220-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
இந்நிலையில், அவரது உடல்நலம் குன்றியதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு உடல்நலம் தேறிய நிலையில் ஹைதராபாத் வந்த அவருக்கு மீண்டும் உடல்நலம் குன்றியது. இதனால் அவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு சரத்பாபு காலமானார் என வதந்தி பரவியது. சமு்க ஊடகங்களில் சரத்பாபு உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாயின. ஆனால், அவர் உயிருடன் உள்ளார் எனவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது எனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவரது சகோதரி டிவீட் செய்தார்.
இந்நிலையில், நேற்று காலை ஹைதராபாத்தில் நடிகர் சரத்பாபுவின் சகோதரரின் மகனான ஆயுஷ் தேஜஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது "நடிகர் சரத்பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வந்த வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவர் மீண்டும் உடல் நலம் தேறிவர இறைவனை பிரார்த்திப்போம்" என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago