இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’, ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படங்களை இயக்கி வருகிறார். ‘இந்தியன் 2’ படத்துக்காக இப்போது தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஷங்கர், அங்கு முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார். கமல் உட்பட பலர் அங்கு நடித்து வருகின்றனர்.
இந்த வார இறுதியில் இந்தியா திரும்பும் அவர், வரும் 23ம் தேதி ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் தொடங்குகிறார். இதில் ராம்சரண், கியாரா அத்வானி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக, அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ராம்சரணும் இந்த வாரம் இந்தியா திரும்புகிறார்.
‘கேம் சேஞ்சர்’ படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் வெளியாகிறது. எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago