'முகப்பருக்களால் தாழ்வு மனப்பான்மை' - சாய் பல்லவி வருத்தம்

By செய்திப்பிரிவு

நடிகை சாய் பல்லவி, தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

நான் அறிமுகமான ‘பிரேமம்’ படத்தில் இருந்து இன்றுவரை மேக்கப்போட்டது இல்லை. பள்ளி நாட்களில் என் முகப்பருக்களால் வேதனைப்படுவேன். இதனால் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. என் குரலும் சரியாக இருக்காது. ‘பிரேமம்’ படத்தில் என்னை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று பயந்தேன். மேக்கப் இல்லாமல் கூட அழகாக இருப்பதாகப் பாராட்டினார்கள். அதுதான் பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அப்போதிருந்து மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அழகைக் கூட்டுவதற்கு மேக்கப் உதவாது என்று கூறவில்லை. எனக்கு இது பிடித்திருக்கிறது. உங்களுக்கு அது தன்னம்பிக்கையைத் தந்தால் தொடரலாம். இவ்வாறு சாய் பல்லவி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்