தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உட்பட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை ஹனிரோஸ். இவர், தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ‘விீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவருக்குத் தெலுங்கில் அதிக வாய்ப்புகள் வருகின்றன.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், உருவக் கேலியால் தான் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது,
“திரைப்படத்தில் கேரக்டருக்கு என்ன ஆடை தேவையோ அதை அணிந்து நடிக்கிறோம். ஆனால், வெளியே விழாக்களுக்கு வரும்போது, என்ன உடையில் வரவேண்டும் என்பது அவரவர் விருப்பம். அது அவர்கள் தனிப்பட்ட உரிமை. பிரபலங்கள் தாங்கள் விரும்பியதை அணிந்துகொள்ளும் சுதந்திரம் வேண்டும். கதாநாயகிகள் கொஞ்சம் எடை கூடினால் உடனே கேலி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். நான் அணியும் உடைகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் இழிவாக விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அது மிகவும் காயப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago