அக்.20-ல் ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ரிலீஸ்

By செய்திப்பிரிவு

நடிகர் ரவி தேஜா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாக உள்ள ‘டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படம் அக்டோபர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்தத் திரைப்படத்தில் நடிகர் ரவி தேஜா உடன் பாலிவுட் நடிகைகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இணைந்து நடிக்கின்றனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' , 'கார்த்திகேயா 2' படங்களை தயாரித்த அபிஷேக் அகர்வால் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

1970களில் ஸ்டூவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்னும் திருடனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படம் அக்டோபர் 20-ம் தேதி பான் இந்தியா முறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்