சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ (Game Changer) என பெயரிடப்பட்டுள்ளது. ராம் சரணின் பிறந்தநாளையொட்டி படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் ரஜினியை வைத்து ‘2.O’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் கைகோத்துள்ளார். ‘ஆர்சி15’ என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பு நடிகர் ராம் சரணின் பிறந்தநாளையொட்டி இன்று வெளியானது. ‘கேம் சேஞ்சர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் வெளியாகிறது.
எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தின் கதைக்கருவை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ள நிலையில், மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன், பாடலாசிரியர் விவேக், பாலிவுட் இயக்குநர் பர்ஹாத் சாம்ஜி ஆகியோர் படத்தில் எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago