தசரா தலைப்புக்கு எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள படம், ‘தசரா’. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இதில் கீர்த்தி சுரேஷ், தீக்‌ஷித் ஷெட்டி, பிரகாஷ் ராஜ், பூர்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வரும் 30ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த சாமி மூவிஸ் நிறுவனம் ‘தசரா’ தலைப்பை சில வருடங்களுக்கு முன்பே பிலிம்சேம்பரில் பதிவு செய்துள்ளது. கடந்த வாரம் வரை அதைப் புதுப்பித்து வந்துள்ளது. இதற்கிடையே நானி படத்துக்கும் அதே பெயரை வைத்திருப்பதால், அந்நிறுவனம் பிலிம்சேம்பரில் முறையிட்டது. அதன் செயலாளர் கிருஷ்ணா ரெட்டி, தலைப்புக்கு முன் ‘நானிஸ்’ என்பதைச் சேர்த்து வெளியிடும்படி தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டார். ஆனால், ‘நானிஸ்’ என்பதை பார்வைக்குத் தெரியாதபடி போஸ்டரில் பதிப்பித்துள்ளதால், சாமி மூவிஸ் நிறுவனம் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்