புஷ்பா 2 - பெங்களூருவில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் காட்சிகள் படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

‘புஷ்பா: தி ரூல்’படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் முக்கியமான காட்சிகள் பெங்களூருவில் படமாக்கப்பபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்ஜெயா, அனசுயா பரத்வாஜ், அஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்தப் படத்தில், சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். முதல் பாகம் வெற்றிப்பெற்ற அடுத்து படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிறிய இடைவெளிக்குப்பின் இப்படத்தின் முக்கியமான காட்சிகள் விரைவில் பெங்களூருவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் காட்சியில் அல்லு அர்ஜுனும், ஃபஹத் ஃபாசிலும் இணைந்து நடிக்க உள்ளனர். ஏற்கெனவே, ஃபஹத் ஃபாசில் படப்பிடிப்பு ஒன்றிற்காக பெங்களூருவில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வருகிற ஏப்ரல் 8-ம் தேதி அல்லு அர்ஜுன் தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த 3 நிமிட கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகலாம் எனவும் தகவல் பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்