மலையாள நடிகரும், அரசியல்வாதியுமான இன்னொசன்ட் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையாளம், தமிழ், இந்தி, கன்னட என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கு மேல் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட். கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட் மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.
இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரண்டு வாரங்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை நேற்று மோசமடைந்தது. தீவிர சிகிச்சைக்குப்பின் தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடிகர் இன்னொசென்ட் புற்றுநோயை புன்னகையுடன் எதிர்கொண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர். புற்றுநோயிலிருந்து தான் மீண்டு வந்தது குறித்து அவர், ‘லாஃப்டர் இன் தி கேன்சர் வார்ட்” (Laughter in the Cancer Ward) என்ற புத்தகத்தையும் கேன்சர் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago