ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உட்பட பலர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், ‘ஆர்ஆர்ஆர்’. கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில் தற்போது ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளது. இதையடுத்து திரையுலகினர் உட்பட பலர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் அடுத்த பாகம் பற்றிய தகவலைத் தெரிவித்துள்ளார் ராஜமவுலி. அவர் அளித்துள்ள பேட்டியில், “ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும். அதன் பணிகளை இப்போது வேகப்படுத்த இருக்கிறேன். இசையமைப்பாளர் கீரவாணி ஒரு ஒன்லைன் சொன்னார். அது பிடித்திருக்கிறது. அதையே எனது தந்தையிடம் சொல்லி எழுத சொல்ல முடிவெடுத்துள்ளோம். தற்போது, அவர் கதையில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். அது முடிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago