மார்ச் 14-ல் நானியின் ‘தசரா’ ட்ரெய்லர் வெளியீடு

By செய்திப்பிரிவு

நானி நடித்துள்ள ‘தசரா’ படத்தின் ட்ரெய்லர் மார்ச் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ‘அடடே சுந்தரா’ படத்தைத் தொடர்ந்து நடிக்கும் படம் ‘தசரா’. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும், இதில் ஷைன்டாம் சாக்கோ பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்