மலையாளத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ரோமாஞ்சம்’ படத்தின் இயக்குநர் ஜித்து மாதவனுடன் நடிகர் ஃபஹத் பாசில் கைகோத்துள்ளார். இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ரோமாஞ்சம்’. சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜுன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வெறும் ரூ.5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானது. ரூ.60 கோடியைத்தாண்டி வசூலித்து வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஷமிர் தாஹிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த அறிவிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஃபஹத் பாசில் இன்று முதல் படப்பிடிப்பு என பதிவிட்டுள்ளார்.
ஃபஹத் பாசிலை பொறுத்தவரை அகில் சத்யன் இயக்கத்தில் ‘பாச்சுவும் அத்புதவிளக்கும்’ ('Paachuvum Athbhuthavilakkum) படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago