சென்னை: நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நடிப்புக்கு திரும்பியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. பாகுபலி, தெய்வ திருமகள் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தச் சூழலில் அவர் நடித்து வரும் புதிய படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நவீன் பொலிஷெட்டி நடித்து வருகிறார். இவர் ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாஸ் படத்தின் மூலம் பிரபலமானவர்.
இந்தப் படம் எதிர்வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது. இந்தப் படத்தின் கதை ரொமான்டிக் காமெடி ஜானரில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாயகி அனுஷ்கா கையில் வைத்துள்ள புத்தகத்தில் ‘ஹாப்பி சிங்கிள்’ என உள்ளது. நாயகன் நவீன் பொலிஷெட்டி அணிந்துள்ள டி-ஷர்ட்டில் ‘ரெடி டூ மிங்கிள்’ என எழுதப்பட்டுள்ளது.
நீரவ் ஷா இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். மகேஷ் பாபு.பி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் வெளியாகும் என தெரிகிறது.
» பிபிசி விவகாரம் குறித்து ஜெய்சங்கரிடம் பேசினேன்: இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்
» “முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி முன்னெடுப்புகள்...” - சென்னை நிகழ்வில் அகிலேஷ் யாதவ் புகழாரம்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago