நடிகை ரகுல் ப்ரீத் சிங், இப்போது இந்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வருடம் அவர் நடித்து 5 இந்தி படங்கள் வெளியானது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய திரைப்படங்கள் இந்தி சேனல்களில் எப்போதும் கொண்டாடப்பட்டே வந்திருக்கின்றன. கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு ஓடிடி மூலமாக அந்தப் படங்களை அதிகமாக பார்க்கத் தொடங்கினர். அதனால் பேசும் விஷயமாக அது மாறியது.
பிராந்திய மற்றும் இந்திப் படங்கள் இரண்டுமே இந்திய சினிமாதுறையின் ஒரு பகுதிதான். இரண்டையும் ஒப்பிடத் தேவையில்லை. ஒரு படம் நன்றாக இருந்தால், அதுவே பார்வையாளர்களைக் கண்டுபிடிக்கும். சமூக வலைதளங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது.
அதனால் விவாதங்கள் நடக்கின்றன. நம்மிடம் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். கலைஞர்கள் இருக்கிறார்கள். நல்ல கதைகள் இருக்கின்றன. அந்த திறமைகளைப் பயன்படுத்தி அற்புதமான சர்வதேசத் திரைப்படத்தை உருவாக்க முடியும். இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago