ஹைதராபாத்: படப்பிடிப்பின்போது நடிகை சமந்தாவுக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது இரண்டு கைகளிலும் சிராய்ப்பு காயங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘ஏ மாய சேஸாவே’ படத்தில் அறிமுகமானவர் சமந்தா. இது தெலுங்கு மொழியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதையாகும். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். உச்ச நடிகர்களுடன் கதையின் நாயகியாக நடிப்பவர் தனது திரைப் பயணத்தில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்தச் சூழலில், அவருக்கு படப்பிடிப்புத் தளத்தில் கைகளில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. அந்தப் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். ‘உலகம் இதனை காயத்தின் வடு என்று சொல்லும். ஆனால், இது எங்களுக்கு அணிகலன்’ என பயனர் ஒருவர் தெரிவித்துள்ளதை சமந்தா ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதில் வைத்துள்ளார்.
» இறுதிகட்டத்தில் பணிகள்: ஸ்மார்ட் சிட்டி ஆக மாறியதா சென்னை? - விரிவான பார்வை
» பாகிஸ்தான் பரிதாபம் | வேலையை இழக்கும் அபாயத்தில் லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள்
கடந்த ஆண்டு அக்டோபரில் தசை அழற்சி நோயான மையோசைடிஸ் பாதிப்புக்கு சமந்தா ஆளானனர். இந்தச் சூழலில் படப்பிடிப்புக்கு திரும்பிய அவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago