'லட்டூ' மலையாள படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறது தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்.
'ப.பாண்டி' படத்தைத் தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி 2', 'வடசென்னை', 'ரஜினி - ரஞ்சித்' படம் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதனைத் தொடர்ந்து மே 14-ம் தேதி ஹாலிவுட் படத்துக்கான பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார்.
தமிழைத் தொடர்ந்து மலையாளத்தில் அறிமுக இயக்குநர் அருண் டோம்னிக் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தை தாமஸ் உடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் மலையாளத்திலும் படத்தயாரிப்பில் இடம்பெறவுள்ளது தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்.
இந்நிலையில், மலையாளத்தில் அருண் கே.டேவில் இயக்கத்தில் உருவாகி வரும் 'லட்டூ' படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார் தனுஷ்.
மினி ஸ்டூடியோ தயாரித்து வரும் இப்படத்தில் ஷபரேஷ் வர்மா, சாஜு நவோதயா, வினய் ஃபோர்ட் மற்றும் பாலு வர்கீஸ் நடித்து வருகிறார்கள். 'ப்ரேமம்' படத்துக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘கம்மத் அண்ட் கம்மத்’ படத்தில் கவுரவ தோற்றத்தில் தனுஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago