‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ பட புகழ் பசில் ஜோசப்பின் ‘தாய்மை’ - ஈர்க்கும் படங்கள்

By செய்திப்பிரிவு

மலையாள பட இயக்குநரும், நடிகருமான பசில் ஜோசப் தன் மனைவியின் தாய்மை பகிர்ந்துகொண்டுள்ள படங்கள் இணையத்தை ஈர்த்துள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் பசில் ஜோசப். இவரது இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘கோதா’ மற்றும் 2021-ம் ஆண்டு வெளியான ‘மின்னல் முரளி’ படங்கள் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இரண்டு படங்களிலுமே நாயகனாக டோவினோ தாமஸ் நடிந்திருந்தார்.

3 படங்களை இயக்கியுள்ள பசில் ஜோசப், பல்வேறு மலையாள படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக அண்மையில் வெளியாகி ஹிட்டடித்த, ‘ன்னா தான் கேஸ் கொடு’, ‘பால்து ஜான்வர்’, ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படங்களின் மூலம் பல்வேறு மொழி சினிமா ரசிகர்களிடையேயும் பாராட்டை பெற்றார் பசில் ஜோசப்.

இவருக்கும் எலிசபத் சாமுவேல் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அண்மையில் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை வெளிபடுத்திய பசில் ஜோசப் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் மகிழ்ச்சியின் உருவகமானவளின் வருகையை அறிவிப்பதில் சந்தோஷம் கொள்கிறோம். அவள் ஏற்கனவே எங்களின் இதயங்களை திருடிவிட்டாள். எங்கள் விலைமதிப்பற்ற மகளின் அன்புடன் நாங்கள் ஆகாசத்தில் பறக்கிறோம். அவளிடமிருந்து ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றை கற்றுகொள்ளவும், அவளின் வளர்ச்சியைக்காணவும் ஆவலாக உள்ளோம்” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் தன் மனைவியின் தாய்மை பகிர்ந்துகொள்ளும்படியான புகைப்படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பசில் ஜோசிப்பின் ரசிக்கும்படியான படங்கள் ரசிகர்களிடம் ஹார்ட்டின்களை குவித்து வருகிறது. ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தில் ஆணாதிக்கவாதியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தவருக்கும், நிஜத்திலிருக்கும் பசிலுக்குமான முரண்கள் ரசிக்க வைக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்