“பொருளாதார ரீதியில்தான் இடஒதுக்கீடு தேவை” - ‘வாத்தி’ இயக்குநர் சர்ச்சைக் கருத்து

By செய்திப்பிரிவு

“இடஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாகத்தான் கொடுக்கப்பட வேண்டும். சாதி ரீதியாக இடஒதுக்கீடு கூடாது” என ‘வாத்தி’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

‘வாத்தி’ படத்தின் ப்ரமோஷனில் ஈடுபட்டிருந்த படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவரிடம், ‘‘ஒருவேளை நீங்கள் மத்திய கல்வியமைச்சரானால் உங்களின் பிரதான முடிவு என்னவாக இருக்கும்?” என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் வெங்கி அட்லூரி, “என் பதில் சர்ச்சையாக இருக்கலாம். ஆனால், தற்போது இருக்கும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து அறிவிப்பேன். இடஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாகத்தான் கொடுக்கப்பட வேண்டுமே தவிர, சாதி ரீதியாக கொடுக்கக் கூடாது” என்றார். அவரின் இந்தக் கருத்து அவர் சொன்னதுபோலவே சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

“கல்வி முறையைப் பற்றி திரைப்படம் எடுப்பதற்கு முன்னதாக, முதலில் நீங்கள் சில விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். அம்பேத்கரை படியுங்கள்” என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். வாத்தி பட விமர்சனம் > கல்வி குறித்து பாடம்... கிட்டியதா பாஸ் மார்க்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்