நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி’ மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் வெளியாகி வருகின்றன. 42 வயதான பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் நடிகை அனுஷ்காவை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. அதை இருவரும் மறுத்தனர். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் ‘ஆதிபுருஷ்’ படத்தில் அவருடன் நடித்துள்ள கீர்த்தி சனோனை காதலித்து வருவதாகத் தகவல் பரவியது. இதை கீர்த்தி மறுத்திருந்தார்.
இதற்கிடையே பிரபாஸுக்கும் கீர்த்தி சனோனுக்கும் அடுத்த வாரம் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக சினிமா விமர்சகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வேகமாக பரவி வருகிறது. இது உண்மையா, இல்லையா என்பதுபற்றி நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் இதை கேலி செய்துள்ளனர். இந்த விஷயம், பிரபாஸுக்கும் கீர்த்தி சனோனுக்கும் தெரியுமா? என்றும் கேட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago