பாவனா ரிட்டர்ன்ஸ்... கவனம் ஈர்க்கும் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' பட டிரெய்லர்

By செய்திப்பிரிவு

தமிழில், மிஷ்கின் இயக்கிய, ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் அறிமுகமானவர், மலையாள நடிகை பாவனா. அவர் மலையாளத்தில், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘நம்மாள்’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். இதை கமல் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியானார் பாவனா. இது வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. மலையாள திரையுலகில் மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். 2017-ம் ஆண்டு வெளியான ஆடம் ஜோன் திரைப்படம் பாவனாவின் கடைசி மலையாளப் படமாகும்.

இதன்பின் மலையாள படங்களில் நடிக்காத அவர், இப்போது மீண்டும் மலையாள சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' (Ntikkakkakkoru Premondarnn) என்ற புதிய மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதில் மைமுனத் அஷ்ரப் என்பவர் இயக்கவுள்ள இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ஷரப் யூ தீன் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து பாவனா மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

காதல் கதையாக உருவாகியுள்ள இதில் பாவனா வழக்கம்போல் முத்திரை பதித்துள்ளார். டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்