ரஜினியை வைத்து படம் இயக்குவேன்: இயக்குநர் ராஜமவுலி தகவல்

By என்.மகேஷ் குமார்

தகுந்த கதை கிடைத்தால் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவேன் என்று இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.

‘பாகுபலி-2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தைப் பாராட்டி திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “பாகுபலி-2 திரைப்படம், இந்திய திரைப்பட உலகுக்கே பெருமை பெற்று தரக்கூடிய படம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு இப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி தனது நன்றியை தெரிவித்திருந்தார். மேலும் ரஜினியும், ராஜமவுலியும் இணைந்தால் ‘அவதார்’ படத்தை மிஞ்சும் அளவுக்கு ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என்று சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் ராஜமவுலி கூறியிருப்பதாவது:

இந்திய திரையுலகில் ரஜினிகாந்த் மிகப்பெரிய நட்சத்திரமாவார். அவரை வைத்து படம் இயக்க பல இயக்குநர்கள் கனவு கண்டிருப்பார்கள். நானும் அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டு மென்று விரும்புகிறேன். ரஜினியின் இமேஜுக்கு தகுந்தாற்போல் கதை கிடைத்தவுடன் கட்டாயமாக அவருடன் இணைவேன். இதுபோன்று ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் பாக்கியசாலி.

இவ்வாறு இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்