மாஸ், அடிதடி, ரத்தக் களறி... - நானியின் ‘தசரா’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

நானி நடிக்கும் ‘தசரா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ‘அடடே சுந்தரா’ படத்தைத் தொடர்ந்து நடிக்கும் படம் ‘தசரா’. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இதில் ஷைன்டாம் சாக்கோ பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி? - டீசரில் ரக்கட் பாய் லுக்கில் கவனம் ஈர்க்கிறார் நானி. மது, புகை, அடிதடி சண்டை என நீளும் டீசரில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தோற்றம் ‘அடே’ சொல்ல வைக்கிறது. டீசரின் இறுதியில் ரத்தக் களறியுடன் நானியின் தோற்றம் படம் பக்கா ஆக்‌ஷ்ன் ட்ராமா என்பதை உணரவைக்கிறது. எனினும் படத்தின் கதையை கணிக்க முடியாத படி டீசர் வெட்டப்பட்டுள்ளது. நிலக்கரிக்கு நடுவிலிருக்கும் ஊர் என தொடங்கும் டீசரின் மூலம் படம் அழுத்தமான கதையை உள்ளடக்கியிருக்கும் என உணர வைக்கிறது. படம் மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்