1000+ படங்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி மறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக புகழ்பெற்ற தெலுங்கு டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 55.

தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற பின்னணி குரல் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி. 1990-களில் சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பணியைத் தொடங்கியவர், கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக தெலுங்கில் வெளியாகும் நடிகர் சூர்யாவின் அனைத்து படங்களுக்கு ஆஸ்தான டப்பிங் கலைஞராக இருந்தவர் ஸ்ரீனிவாச மூர்த்தி.

அண்மையில் மாதவனின் ‘ராக்கெட்ரி தி நம்பி விளைவு’ படத்தின் தெலுங்கு பதிப்பில் மாதவன் குரலுக்கும், ‘விஸ்வாசம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக அஜித் குரலுக்கும் டப்பிங் செய்திருந்தார். நடிகர்கள் ஷாருக்கான், மோகன்லால், உபேந்திரா படங்கள் மற்றும் குறிப்பிட்ட ஹாலிவுட் படங்களின் தெலுங்கு பதிப்புகளுக்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலம் பிரதான கலைஞராக வலம்வந்தார். மேலும் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீனிவாச மூர்த்தி மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்