படப்பிடிப்புக்கு திரும்பினார் சமந்தா

By செய்திப்பிரிவு

நடிகை சமந்தா, மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நோய் பற்றியும் இதில் இருந்து விரைவில் மீண்டும் வருவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ‘சாகுந்தலம்’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதற்கிடையே, இந்தி நடிகர் வருண் தாவனுடன் அவர் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வந்தார். ‘தி ஃபேமிலிமேன்’ தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்கிய இந்த தொடரின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. சமந்தாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், நவம்பர் மாதம் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே அந்த தொடரில் சமந்தா விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதை ‘சிட்டாடல்’ குழு மறுத்திருந்தது.

இந்நிலையில் இப்போது உடல் நலம் குணமானதை அடுத்து நடிகை சமந்தா இதன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். படக்குழுவினர் இதைத் தெரிவித்துள்ளனர். இதன் ஒரு ஷெட்யூலை முடித்தப் பின், விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ‘குஷி’ படப்பிடிப்பில் சமந்தா இணைய இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்