மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘இரட்ட’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ரோஹித் எம்ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கும் மலையாள படம் ‘இரட்ட’. அஞ்சலி, ஸ்ரீந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபு மோன், அபிராம், சரத் சபா, ஷெபின் பென்சன், ஸ்ரீஜா, ஜித்து அஷ்ரஃப் உள்ளிட்ட பலரும் இப்படத்தின் நடித்துள்ளனர். மார்ட்டின் பிரக்கத்துடன் இணைந்து ஜோஜூ ஜார்ஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது..
ட்ரெய்லர் எப்படி?
ஜோஜூ ஜார்ஜ்ஜின் இரட்டை வேடம் ட்ரெய்லரில் மிரட்டலாக காட்சியளிக்கிறது. அண்ணன் - தம்பிகளான இருவருக்குள்ளும் நடக்கும் பிரச்சினையை மையப்படுத்தி படம் உருவாகிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. போலீஸ் கதாபாத்திரத்திலும் உடல் மொழியிலும் ஈர்க்கிறார் ஜோஜூ ஜார்ஜ். மென்சோகத்துடன் அஞ்சலி கதாபாத்திரம் கவனம் பெறுகிறது. சீரியஸாக நகரும் ட்ரெய்லர் காட்சிகள் அழுத்தமான கதைக்கான லீட்-ஐ கொடுக்கிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
» ‘எமர்ஜென்சி படத்திற்காக எனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்தேன்’ - நடிகை கங்கனா ரனாவத்
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago