புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய பாலகிருஷ்ணா - ரசிகர்கள் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் மாணவிக்கு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்து உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது அறுவை சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்திருந்தனர். பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மாணவியின் குடும்பம் குறிப்பிட்ட தொகையை ஏற்பாடு செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அந்த மாணவிக்கு உதவ முன்வந்துள்ளார். மாணவியின் மருத்துவ செலவுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ள அவர், மேல் சிகிச்சைக்கான செலவுகளையும் ஏற்கொள்கிறேன் என உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவின் இந்தச் செயலால் அவரது ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 12-ம் தேதி பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.104 கோடி வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்