பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவர் இப்போது நடித்துள்ள படம், ‘கிராந்தி’. வி.ஹரிகிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரச்சிதா ராம், ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்துள்ளார். ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இந்தப் படம் பற்றி கடந்த வாரம் பேசிய தர்ஷன், அதிர்ஷ்ட தேவதை குறித்து ஆபாசமாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஹொசப்பேட்டையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கலந்துகொண்ட தர்ஷன் மீது மர்மநபர் ஒருவர் காலணியை வீசினார். இது பரபரப்பானது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள கன்னட நடிகர் சிவராஜ்குமார், இதற்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் சில கன்னட நடிகர்கள் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago