‘ஒரு அடார் லவ்’படத்தை இயக்கிய ஓமர் லுலு இயக்கியுள்ள மலையாளப் படம், ‘நல்ல சமயம்’. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா, கோழிகோட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் சனிக்கிழமை நடக்க இருந்தது. சிறப்பு விருந்தினராக ஷகிலா அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், வணிக வளாகம் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டது. இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதுபற்றி ஷகிலா கூறும்போது, ‘இது எனக்குப் புதிதல்ல. பலமுறை இப்படி நடந்துள்ளது. என்னை ஏற்கமறுப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள வணிக வளாகம், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அப்படிச் சொன்னதாகவும் மற்றபடி ஷகிலாவிடம் பாகுபாடு காண்பிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதே வளாகத்தில், சில மாதங்களுக்கு முன் நடந்த சினிமா நிகழ்ச்சியில் நடிகைகளிடம் சிலர் தவறாக நடந்து கொண்டனர். இதையடுத்து போலீஸார் எச்சரித்ததை அடுத்துவணிக வளாக நிர்வாகம் பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago