மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்துள்ள 'புலிமுருகன்' படம் ரூ.100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதுகுறித்து மோகன்லால் தனது சமூக வலைதள பக்கங்களில் நன்றி தெரிவித்து வெளியிட்ட தகவலில், "ரூ.100 கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையை அடைந்துள்ளது 'புலிமுருகன்'.
இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த இயக்குநர் வைஷாக், தயாரிப்பாளர் தொமிச்சன் முலகுப்படம், சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன், கதாசிரியர் உதயகிருஷ்ணா. ஒளிப்பதிவாளர் ஷாஜி மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் நன்றி.
இப்படத்தை திரையரங்கில் பார்த்த ஒவ்வொரு ரசிகராலும்தான் இது சாத்தியமானது. அவர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக, வெற்றிக்கு அருளிய இறைவனுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
மோகன்லால், கமாலினி முகர்ஜீ, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படத்தின் மற்ற மொழிகளின் மறு ஆக்க உரிமைக்குப் போட்டி உருவாகும் அளவுக்குப் படத்தின் கதை, டோலிவுட் மற்றும் பாலிவுட் படவுலகைக் கவர்ந்திருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவியது. இறுதியில் மொத்தமாக இந்திய ரீமேக் உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் கைப்பற்றி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இப்படத்தின் ரீமேக்கை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முலகுப்பாடல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
58 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago