தமிழில் அறிமுகமான தேசிய விருது பாடகி நஞ்சம்மா - வைரலாகும் பாடல்

By செய்திப்பிரிவு

'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் 'களக்காத்த சந்தன மேரம்' பாடலின் மூலம் கவனம் பெற்ற நஞ்சம்மா தமிழில் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படத்தை இயக்குநர் சச்சி இயக்கியிருந்தார். இதில் நடிகர்கள் பிருத்விராஜூம், பிஜூ மேனனும் நடித்திருந்தனர். 2020-ம் ஆண்டு வெளியான இப்படம் 4 தேசிய விருதுகளைப் பெற்றது. குறிப்பாக, அப்படத்தில் இடம்பெற்ற ‘களக்காத்த சந்தன மேரம்’ பாடலைப் பாடிய நஞ்சம்மாவின் குரல் தென்னிந்திய சினிமா ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது. பழங்குடியான நஞ்சம்மா மேடைக் கச்சேரிகளில் பாடல்களைப் பாடிவந்துள்ளார். ஆனால், அய்யப்பனும் கோஷியும் படம் அவரை சினிமா உலகில் பெரிதாக அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், அவர் தமிழிலும் பாடகியாக அறிமுகமாக உள்ளார். 'ஆதாம்' மலையாள படத்தை இயக்கிய இயக்குநர் சமர் 'சீன் நம்பர் 62' என்கிற படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்தப்படத்தில் 'என் சேவல்' என்ற பாடலை பாடகர் வேல்முருகனுடன் இணைந்து நஞ்சம்மா பாடியுள்ளார். இதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் தேசிய விருது பெற்ற நஞ்சம்மா. இந்தப்பாடலை சிவபிரகாசம் எழுதியுள்ளார். இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாடல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்