இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆன நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் | நெட்டிசன்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: சினிமா நட்சத்திர தம்பதியர்களான நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி உள்ளனர். இந்த செய்தியை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

''நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும். உயிர் மற்றும் உலகம்'' என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார்.

கடந்த ஜூன் 9-ம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்னர் காதலர்களாக இருந்து வந்தனர். வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்திருக்கலாம் என தகவல். இந்நிலையில், பலரும் தம்பதியருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

‘அன்பான இதயங்கள் என்றென்றும் இன்பமாய் இருக்க வாழ்த்துகள். ஆசீர்வாதங்கள்’ என ஒருவர் தெரிவித்துள்ளார்

‘வாவ்! அம்மா அப்பாவுக்கு வாழ்த்துகள்’, ‘கடவுளே. மனமார்ந்த வாழ்த்துகள். கடவுள் கொடுத்த அருள் இது. அதுவும் இரட்டை குழந்தைகள். அவர்களுக்கு ஆசீர்வாதங்கள்’ என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

13 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்