'நடிகர் சீனிவாசன் நலமுடன் உள்ளார். விரைவில் திரைக்கு திரும்புவார்' என மலையாள நடிகை ஸ்மினு சிஜோ தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமா உலகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் சீனிவாசன். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். இதுவரை 200-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். மலையாள சினிமாவின் சிறந்த திரைக்கதை எழுத்தாளரான சீனிவாசன், கேரளாவின் சமூக மற்றும் அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையால் அறியப்பட்டவர்.
கேரளாவின் மாநில விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப்பெற்றவர், 1998-ம் ஆண்டு வெளியான 'சிந்தாவிஷ்டாய ஸ்யாமலா' ( Chinthavishtayaya Shyamala) படத்திற்காக தேசிய விருது பெற்றார். இதனிடையே, இதய பிரச்சினை காரணமாக அண்மையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டிருந்தார்.
அண்மையில் நடிகர் சீனிவாசனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் அவர் பெரிதாகப் படங்களில் நடிக்கவில்லை. உடல் ரீதியாக மிகவும் நலிவுற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருகிறார். மலையாளத் தொலைக்காட்சி ஒன்று, மலையாள திரைக்கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்போடு சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு மேடையேறிய ஸ்ரீனிவாசனை, நடிகர் மோகன்லால் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகர் சீனிவாசனை நடிகை ஸ்மினு சிஜோ அவரது இல்லத்திற்கு சென்று நேரடியாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தொடர்பாக நடிகை ஸ்மினு சிஜோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நடிகர் சீனிவாசன் நலமுற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சிறு சிறு உடல் உபாதைகள் தவிர, சீனிவாசன் இன்று பூரண நலமுடன் இருக்கிறார் என்ற மகிழ்ச்சியில் இந்தப் புகைப்படம் இங்கே பதிவிட்டுள்ளேன். அவருக்கு இப்போது சின்ன சின்ன உடல் நலப்பிரச்சினைகள் தான் இருக்கின்றன. மறுபடியும் உடல்நல ஆரோக்கியத்தோடு திரையிலும் வருவார். அவரது இருமகன்களான வினித், தியான் இருவரது திரைப்பங்களிப்பையும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சீனிவாசனின் மனைவி விமலா அவரை உடன் இருந்து கவனித்துக்கொள்கிறார்'' என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago