‘லைகர்’ படம் தோல்வி அடைந்ததால், அதே டீம் இணைய இருந்த ’ஜனகணமன’ படம் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்த ’லைகர்’ படம் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியானது. புரி ஜெகநாத் இயக்கிய இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியாகி தோல்வியைச் சந்தித்துள்ளது. இது படக்குழுவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே இதே டீம் இணைந்து ’ஜனகணமன’ (JGM) என்ற படத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்குவதாக அறிவித்தது.இதில் ‘லைகர்’ படத்தில் முதலீடு செய்திருந்த, மை ஹோம் குரூப் நிறுவனம் தயாரிப்பாளராக இணைந்திருந்தது. தயாரிப்பாளர்களில் ஒருவராக விஜய்யின் ’வாரிசு’ இயக்குநர் வம்சி பைடிபள்ளியும் இருந்தார்.
இந்நிலையில் ‘லைகர்’ தோல்வி அடைந்ததால், மை ஹோம் குரூப் நிறுவனம் இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டது. இதையடுத்து விஜய் தேவரகொண்டா, புரிஜெகநாத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி படத்தை நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
19 mins ago
சினிமா
53 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago