துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்த படம், சீதா ராமம். ஹனு ராகவபுடி இயக்கிய இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த மாதம் 5-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்தியில் டப் செய்யப்பட்டு நேற்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதுபற்றி நடிகை மிருணாள் தாக்கூர் கூறியதாவது:
‘சீதா ராமம்’ மூலம் தென்னிந்திய சினிமாவில் எனக்கு சிறந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை விட சிறப்பான அறிமுகம் கிடைக்க வாய்ப்பில்லை. இந்தப் படத்துக்காகக் கிடைத்த வரவேற்பு நம்ப முடியாதது. எல்லாவற்றிற்கும் மேலாக இது அழகான, இனிமையான கதையை கொண்ட படம். இந்தியில் ரீமேக் செய்யப்படுவதால், அதிகமானவர்களைச் சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி. ஒரு நடிகையாக, இந்தியிலும் தென்னிந்திய சினிமாவிலும் சிறந்ததைப் பெற்றிருப்பது உத்வேகத்தைத் தருகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago