'ஆன்டி' என அழைத்தால் வழக்கு தொடுப்பேன் என்று நடிகை அனுசுயா எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
பல படங்களில் நடித்துள்ள இவர், ‘புஷ்பா’ படத்தில் மங்களம் சீனுவாக நடித்திருக்கும் சுனிலின் மனைவியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது. இப்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். தொகுப்பாளினியாக இருந்து நடிகையான இவருக்கும் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ ரிலீஸ் ஆனபோதே பிரச்னை. அந்தப் படத்தை அனசுயா, விமர்சித்ததால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தையும் மறைமுகமாக கிண்டலடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் அனசுயா. கோபமடைந்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள், அனசுயாவை ‘ஆன்ட்டி’ என ட்ரோல் செய்ய தொடங்கினர். இந்த ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் இந்திய அளவில் டிரென்ட் ஆனது. இதனால் எரிச்சலடைந்த அனசுயா, தன்னை ‘ஆன்ட்டி’ என விமர்சித்தால், அந்தப் பதிவுகளை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து வழக்குத் தொடுப்பேன் என்று எச்சரித்துள்ளார். மேலும் தன்னை ‘அக்கா’ என்றோ, ‘ஆன்ட்டி’ என்ற அழைக்கக் கூடாது என்றும் அனசுயா என்றே அழைக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago