பின்னணியில் சில்க் ஸ்மிதா... கவனம் ஈர்த்த நானியின் ‘தசரா’ போஸ்டர்

By செய்திப்பிரிவு

நானி நடிக்கும் 'தசரா' தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'அன்டே சுந்தரானிகி' படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் திரைப்படம் 'தசரா' (Dasara). இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களைத் தவிர, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், 'தசரா' படம் அடுத்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளளது. அத்துடன் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

அந்த போஸ்டரில் நடிகை சில்க் ஸ்மிதா புகைப்படத்திற்கு முன்பு கையில் பாட்டிலுடன் முரட்டுத்தனமான தோற்றத்துடன் நானி அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்