இந்தியன் 2 மற்றும் RC15 என இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ஷூட் செய்யப்படும்: இயக்குநர் ஷங்கர்

By செய்திப்பிரிவு

நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரணின் ‘RC15’ படப்பிடிப்பு பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். RC15 படத்தின் அடுத்த ஷெட்யூலை செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஷூட் செய்ய தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய திரைதுறையின் இயக்குனர்களில் முதன்மையானவர் இயக்குனர் ஷங்கர். இவரது படங்கள் பரவலாக இந்தியா முழுவதும் வரவேற்பு பெற்றுள்ளன. பிரம்மாண்ட இயக்குனர் என அறியப்படுகிறார்.

கமல்ஹாசன் நடிப்பில் இவர் இயக்கி வந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த இடைவெளியில் நடிகர் ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அதனால் ‘RC15’ என அறியப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்பு ‘ஆகஸ்ட் 24’ நள்ளிரவு வெளியாகி இருந்தது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்