அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கியது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த திரைப்படம் 'புஷ்பா'. கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி வெளியா இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பஹத் ஃபாசில், தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படம் தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளி்லும் வரவேற்பைப் பெற்றது. முதல் பாகம் வசூலில் மிரட்டியிருப்பதால் அடுத்தப் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
» ரூ.50 கோடி க்ளப்பில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்தியின் ‘விருமன்’
» செக் மோசடி வழக்கு: இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது பாகமான 'புஷ்பா2' படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. நடிகர் அல்லு அர்ஜுன் அமெரிக்கா சென்றுள்ளதால் அவர் இதில் கலந்துகொள்ளவில்லை.
அமெரிக்காவில் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் அல்லு அர்ஜுன் கலந்துகொண்டுள்ளார். 76-வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துபவராக அல்லு அர்ஜுன் அழைக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அவர் தன் மனைவியுடன் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
New York witnessed a mammoth crowd of over 5L people showering love at @alluarjun as he graced the prestigious India Day parade as the Grand Marshal. This generous display of love by the fans proves that the icon star is now a global star. #GrandMarshalAlluArjunAtNYC pic.twitter.com/Dka2E5Lk1t
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago