“ராஜமௌலி கொடுத்த நம்பிக்கையால் 'பொன்னியின் செல்வன்' சாத்தியமானது” - இயக்குநர் மணிரத்னம்

By செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.ராஜமௌலி, சிரஞ்சீவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் மணிரத்னம்.

'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைபில், படத்தின் இரண்டாவது பாடலான 'சோழா சோழா' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதனிடையே, படத்தின் தெலுங்கு பதிப்பை விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்துவரும் தில் ராஜு வாங்கி வெளியிடுகிறார். தெலுங்கு பதிப்பு தொடர்பான நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் பேசிய இயக்குநர் மணிரத்னம், சிரஞ்சீவி மற்றும் எஸ்எஸ் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்தார். சிரஞ்சீவிக்கு நன்றி சொன்னது குறித்து பேச மறுத்த மணிரத் மணிரத்னம், “ஒரு விதத்தில், ராஜமௌலி நம் அனைவருக்கும் ஒரு கதவைத் திறந்து, இந்த மாதிரியான படத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளார்.

ஒரு படத்தை இரண்டு பகுதிகளாக கதை சொல்லி வெற்றி பெறலாம் என்பதை அவர் நமக்கு காட்டியுள்ளார். பாகுபலி மூலம் இது சாத்தியமானது. எனவே நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பாகுபலி வடிவத்தில் ராஜமௌலி ஒரு பிரம்மாண்டமான பணியை வெற்றிகரமாக முடித்த விதத்தைப் பார்த்த பிறகே, பொன்னியின் செல்வன் படத்தில் நான் பணியாற்றத் தொடங்கினேன்" என்று பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்