நாயகியாக அறிமுகமாகும் ‘விஸ்வாசம்’ பேபி அனிகா

By செய்திப்பிரிவு

'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' படம் மூலம் கவனம் பெற்ற பேபி அனிகா தற்போது மலையாள திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகிறார்.

2015-ம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் அனிகா. தொடர்ந்து 2019-ம் ஆண்டு 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான 'விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். பேபி அனிகா எனவும் அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது அவர் 'ஓ மை டார்லிங்' என்ற மலையாளப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கியது. கொச்சியில் உள்ள கும்பளத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

அறிமுக நாயகன் ஆல்ஃபிரட் டி சாமுவேல் நடிக்கும் படத்தில் அனிகாவும் அறிமுகமாகிறார். தவிர முகேஷ், லீனா, விஜயராகவன், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை, ஸ்ரீகாந்த் முரளி, நந்து ஆகியோர் இப்படத்தில் சில முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜினேஷ் கே ஜாய் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கு முன் ‘இஷ்க்’, ‘ஜோ அண்ட் ஜோ’ போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அன்சார் ஷா, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்