மதாம் துசோட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் 'பாகுபலி' கதாபாத்திரத்தின் மெழுகுச்சிலை 2017ம் ஆண்டில் நிறுவப்பட இருக்கிறது.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இப்படத்துக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையும் பெற்றது.
'பாகுபலி' படக்குழுவுக்கு மேலும் ஒரு பெருமை கிடைத்திருக்கிறது. மதாம் துசோட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் 'பாகுபலி' கதாபாத்திரத்தின் மெழுகு சிலை நிறுவப்பட இருக்கிறது.
2017ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெறவுள்ள மதாம் துசோட்ஸ் நிகழ்வுக்காக 'பாகுபலி' மெழுகு சிலை வடிவமைப்படுகிறது. இது குறித்து மதாம் துசோட்ஸ் பொது மேலாளர் "உலகளவில் இந்தியாவின் மூன்றாம் அதிக வசூல் ஈட்டப்பட்ட படமும், இந்தியாவின் முதல் அதிக வசூல் ஈட்டப்பட்ட படம் 'பாகுபலி' என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இதனால் கூகுள் இணையத்தில் அதிகம் தேடப்படும் நபராக பிரபாஸ் திகழ்கிறார். இதனால் பலரும் பிரபாஸின் மெழுகு சிலையை வடிவமைக்க விருப்பம் தெரிவித்தனர். மகாத்மா காந்தி, தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்குப் பிறகு பிரபாஸின் 'பாகுபலி' கதாபாத்திரம் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் மெழுகு சிலை வரிசையில் அமையவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இச்சிலை வடிவமைப்பிற்காக ஹைதராபாத்தில் மதாம் துசோட்ஸ் குழு பிரபாஸை பல்வேறு விதமான அளவீடுகள் எடுத்துள்ளனர். இந்நிகழ்வு குறித்து பிரபாஸ், "மதாம் துசோட்ஸ் என்னை தேர்வு செய்தது எனக்கு மிகழ்ச்சி அளிக்கின்றது. இதற்கு காரணமாய் இருந்த எனது ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. 'பாகுபலி'யில் என்னை நடிக்க வைத்த எனது குரு ராஜமெளலிக்கு நான் இத்தருணட்ஹ்தி நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
39 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago