லைகர் ஜெயம் ரவி பட ரீமேக்கா?

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள படம், ‘லைகர்’. புரி ஜெகநாத் இயக்கியுள்ள இந்தப் படம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகிறது. ரம்யா கிருஷ்ணன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படம், வரும் 25-ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய விஜய் தேவரகொண்டாவிடம், “இது அசின், ஜெயம் ரவி நடித்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் ரீமேக்கா?” என்று கேட்கப்பட்டது. இதை மறுத்த விஜய் தேவரகொண்டா, “குத்துச் சண்டைக் கதை என்பதால் அப்படி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அந்தப் படத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. நான் எப்போதும் ரீமேக் படங்கள் பண்ணமாட்டேன். ரீமேக்கை நான் விரும்புவதும் இல்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்