கேஜிஎஃப் இயக்குநர் - பிரபாஸின் ‘சலார்’ ரிலீஸ் செப்டம்பர் 2023-க்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில், கே.ஜி.எஃப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் திரைப்படம் தான் ‘சலார்’. இந்த திரைப்படம் எதிர்வரும் 2023, செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஹொம்பலே பிலிம்ஸ் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி வருவது குறித்த அறிவிப்பு கடந்த 2020 வாக்கில் வெளியானது. இந்நிலையில், படம் நடப்பு ஆண்டில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது வெளியீட்டு தேதி அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் உடன் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் ஜெகபதி பாபு போன்ற நடிகர்களும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. டார்க் சென்ட்ரிக் தீமில் இந்தப் படம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல். இந்தத் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படமாக இது அறியப்படுகிறது.

ரவி பஸ்ரூர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இவர்தான் கே.ஜி.எஃப் சாப்டர் 1 மற்றும் 2-விற்கு இசை அமைத்தவர். இந்தப் படம் பான் இந்தியா சினிமாவாக தயாராகி வருகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில்தான் படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்