தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’, ‘கந்தகோட்டை’, ‘வேலூர் மாவட்டம்’, ‘வித்தகன்’, ‘தகராறு’, ‘விசித்திரன்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. இப்போது ‘பிசாசு 2’ படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகையான இவர், அங்கு ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிறார். துபாயை சேர்ந்த தொழிலதிபர் சானித் ஆசிப் அலியை இவர் திருமணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்களும் பூர்ணாவின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வேகமாக பரவின. அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டதாக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதை மறுத்த பூர்ணா, தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ‘எப்போதும் என்னுடையவர்’ என அதில் குறிப்பிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பூர்ணா. இவர்களது திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago