ஆக்‌ஷனில் கலக்கும் விஜய் தேவரகொண்டா - வெளியானது 'லைகர்' ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

மும்பை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'லைகர்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'லைகர்' திரைப்படம். நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யாகிருஷ்னண், ரோனித் ராய், அலி, மக்ராந்த் தேஷ் பாண்டே, ஷா எம்தியாஜ், விஷு ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் குத்துச்சண்டையை மையமாக கொண்ட கதை அம்சத்தை கொண்டுள்ளது. இந்தப் படத்தை தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. சுமார் 02.05 நிமிடம் ரன் டைம் கொண்ட இந்த ட்ரெய்லரில் பெரும்பகுதி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன. ட்ரெய்லரில் சில நொடிகள் மைக் டைசனும் காட்சி அளிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்