ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கிய படம் ‘ஆர்ஆர்ஆர்’. கடந்த மார்ச் 24-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் ராஜமவுலி. இந்நிலையில், மகாபாரதக் கதையை இயக்குவதுதான் தனது கனவு என்று ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
‘‘இந்திய கதைகளை உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அதை பெரிதாக, பிரம்மாண்டமாக, சிறப்பாக எடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். மகாபாரதக் கதையை படமாக்குவது என் நீண்ட நாள் கனவுத் திட்டம். அதை தொடங்குவதற்கு முன்பு மூன்று அல்லது நான்கு படங்களை இயக்கி முடிக்க விரும்புகிறேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago