சிரஞ்சீவி நடிக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு

By செய்திப்பிரிவு

தெலுங்கு திரையுலகின் 'மெகா சூப்பர் ஸ்டார்' நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படம் 'காட்ஃபாதர்'. மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். படத்தில் சல்மான் கான், பூரி ஜெகன்னாந்த், சத்ய தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதோடு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் கட்சிக் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் நின்றுகொண்டிருக்க, கெத்தாக காரிலிருந்து இறங்குகிறார் சிரஞ்சீவி. இடையில், 'தி பாஸ் இஸ் ஹியர் டூ ரூல் ஃபார் எவர்' என்ற வாசகத்துடன் சிரஞ்சீவியின் பெயர் வருகிறது. தொடர்ந்து சிரஞ்சீவி நடந்து செல்லும்போது, 'காட்ஃபாதர்' என படத்தின் பெயர் போடப்படுகிறது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

வீடியோவைக் காண:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்