மர்மமும் பீதியும் - கவனம் ஈர்க்கும் கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி உள்ள 'விக்ராந்த் ரோணா' திரைப்படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் இதுவரையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகி உள்ள திரைப்படம் 'விக்ராந்த் ரோணா'. அனுப் பண்டாரி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். நடிகர் கிச்சா சுதீப் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்து, நடித்துள்ளார். நிரூப் பண்டாரி, நீத்தா அசோக், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். 3டி வடிவில் வரும் ஜூலை 28-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் 2.57 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை வைத்து பார்க்கும்போது கிச்சா சுதீப் காவல்துறை அதிகாரி என யூகிக்க முடிகிறது. மர்மமும், பீதியும் நிறைந்த ஊரில் அதனை களைய முயற்சிப்பது போல எழுதப்பட்டுள்ளது அவரது கதாபாத்திரம்.

இந்தப் படம் சினிமா ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதன் காட்சி அமைப்புகள் பார்க்க அப்படி இருக்கிறது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான காட்சிகள் இருள் சூழ்ந்திருப்பதை கவனிக்க முடிகிறது.

ட்ரெய்லர் வீடியோ லிங்க் இங்கே...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்