“எங்கள் உதவியின்றி உயர்ந்திருக்கிறாய்” - வெங்கட் பிரபுவுக்கு இளையராஜா தெலுங்கில் வாழ்த்து

By செய்திப்பிரிவு

“யாருடைய உதவியும் இல்லாமல் திரையுலகில் உயர்ந்திருக்கிறாய்” என இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு இளையராஜா தெலுங்கில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து வெங்கட்பிரபு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வெங்கட் பிரபுவுக்கு இது முதல் பை லிங்குவல் படம் என்பதும், நாக சைதன்யா நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இந்நிலையில், இளையராஜா தெலுங்கில் பேசிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ''வாழ்த்துகள் வெங்கட்பிரபு. நான் இருந்தும், உன்னுடைய தந்தை இருந்தும், யாருடைய உதவியும் இல்லாமல், நீயாக வளர்ந்து படங்களை இயக்கி இந்த திரையுலகத்தில் மிகப்பெரிய இடத்தையும் பெயரையும் பெற்றிருக்கிறாய். அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உன்னுடைய புதிய படத்தின் பூஜையில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

இருப்பினும், என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு. உன்னுடைய வெற்றிப்படத்தில் நான் இசையமைப்பது ஓர் ஆரோக்கியமான விஷயம். வாழ்த்துகள்'' என்று பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்