பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகையின் முகம் வீங்கியது - மருத்துவமனை மீது சுவாதி புகார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஜே.பி. நகரை சேர்ந்தவர் நடிகை சுவாதி. சில கன்னட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு பல் வலியால் பாதிக்கப்பட்ட சுவாதி ஹென்னூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அடுத்த சில தினங்களில் சுவாதியின் முகம் பெரியதாக வீங்கியதுடன், கடுமையான பல் வலியும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற சுவாதிக்கு மருத்துவர் வேறு சில மருந்துகளை பரிந்துரைத்துள்ளார்.

இருப்பினும் அவரது முக வீக்கம் குறையாமல், முகத்தின் அமைப்பே வெகுவாக மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் முறையிட்டுள்ளார். அதற்கு ஒரு சில தினங்கள் வீக்கம் தானாக குறைந்துவிடும் எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சுவாதி தனது சமூக வலைதள பக்கத்தில், “எனக்கு தவறான சிகிச்சை அளித்ததால் முகத்தில் ஏற்பட்ட வீக்கம் இன்னும் குறையவில்லை. முகத்தின் அமைப்பே கோரமாக மாறி விட்டது. இதனால் தொழில் வாய்ப்புகளை இழந்துவிட்டேன். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்காமல் அலட்சியப்படுத்துகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்